நாடு முழுவதும் இந்த மது என்ற அரக்கன் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் வலியுறுத்தி வந்தாலும், இன்னொரு புறம் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற பயத்தில், மத்திய, மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த சற்றே தயக்கம் காட்டுகிறது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பீகார் மாநிலத்தில், மதுவிலக்கு சட்டம் அமலில் இருக்கிறது. ஆகவே கள்ளச்சாரயம் அதிகரித்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
எப்படியாவது கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு முயற்சி செய்து வந்தாலும், அது சரியாக பலன் அளிக்கவில்லை. அதேபோல அந்த மாநிலத்தில் நடைபெறும் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும், கலாச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. அதோடு கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில்தான் அந்த மாநிலத்தில், நடைபெற்ற ஒரு விழாவில் சிலர் கள்ளச்சாராயத்தை குடித்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கு அதே இடத்தில் பார்வை குறைபாடு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் உயிரிழந்த இருவருக்கும், கள்ளச்சாராயத்தை விநியோகம் செய்த இரண்டு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.