ஆந்திர மாநிலம் விஜயவாடா நகர் கிருஷ்ண லங்கா என்ற பகுதியில் வசித்து வந்தவர் தான் நாகேஸ்வரராவ். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஒரே மாதிரி உடை அணிதல், ஒன்றாகவே சாப்பிடுவது, ஒன்றாகவே வெளியே செல்வது என இவர்களது நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த நெருக்கம் இருவரிடையே தன்பாலின ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இருவரும் வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டால், தனித்தனியாக பிரிந்து விடுவோம் என கருதியுள்ளனர். இதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று நாகேஸ்வரராவ் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதன்படி, நம்மில் யாராவது ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என்றபோது பவன் பெண்ணாக மாற சம்மதித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பவன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறினார். பின்னர் நாகேஸ்வரராவிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் கூறியுள்ளார். ஆனால், நீ அழகாக இல்லை அதனால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என நாகேஸ்வர ராவ் மறுத்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பவன், கிருஷ்ண லங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னிடம் இருந்த நகை, பணத்தை பறித்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக கூறியுள்ளார்.