fbpx

வாவ்…! ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டியில் கடன்…! தமிழக அரசின் அசத்தலான திட்டம்…! எப்படி பெறுவது…?

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் கைவினை கலைஞர்கள் அவர்களது மூலதன சேவையை பெற்று தொழிலை மேம்படுத்திட குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்திலும் அதிகபட்சம் ரூ.10.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல், இருத்தல் வேண்டும். ஆண்களுக்கு 6%, பெண்களுக்கு 5% வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனுதவியாக ரூ.10,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட கடன் திட்டங்களின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் சமணர் ஆகிய சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம், மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து பயனடையலாம்.

Vignesh

Next Post

மதுவைவிட கல்லீரலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் உணவுகள்.? மருத்துவர்களின் எச்சரிக்கை.!

Wed Jan 24 , 2024
நவீன காலத்தில் நாம் உண்ணும் உணவுகளின் மூலம் நமக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைந்த உணவை உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலில் தொற்று கிருமிகள் தாக்குகின்றன. சத்தான உணவை உண்பதே இதற்கு ஒரே தீர்வு. இந்த ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் குறையும் போது நம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் குறைகிறது. மேலும் நம் உடலில் உள்ள உறுப்புகளில் முக்கியமான ஒன்று கல்லீரல்.  உடலில்  தேங்கும் […]

You May Like