நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளை உள்ளடக்கிய மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான முகாம் ராயல் மஹால், ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் 14.09.2023 காலை 10.30 மணி முதல் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை கடன் திட்ட முகாம்களை நடத்த தெரிவித்ததின்படி நாமக்கல் மாவட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ளவாறு இம்முகாம் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, கால்நடைத்துறை, கைத்தறித்துறை, தாட்கோ, கதர்கிராம தொழில் வாரியம், கதர் கிராம தொழில் ஆணையம் அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கும் கடனுதவிக்கான வசதியமைப்புகள் வழங்கப்படும்.
மேலும் கடன்தொகை விடுவிப்பு பயனாளிகளுக்கு உடன் வழங்கவும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கவும் இக்கடன் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. எனவே தொழில் முனைவோர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தொழில் விரிவாக்கம் செய்ய இருப்போர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்வதுடன் புதியதாக கடனுதவி பெற விரும்புபவர்கள் தங்களது அசல் ஆவணங்கள் மற்றும் துவங்கப்படும் தொழில் குறித்த திட்ட அறிக்கைகளுடன் வந்து அன்றே விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவேற்றம் பெற்று கடனுதவி பெறலாம் என தெரிவித்துள்ளார்.