fbpx

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்..!! எப்போது தெரியுமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறு வரையறை முடிந்த பிறகு, 2021இல் திமுக ஆட்சி அமைந்த பிறகு, மற்ற 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், முதலில் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் இந்தாண்டு டிசம்பர் மாதத்திலும், மற்ற 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டிலும் முடிவுக்கு வருகிறது.

2026இல் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலும் வருவதால், முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை முன்னதாகவே முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணைய செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஊரக உள்ளாட்சிகளின் சாதாரண தேர்தலுக்கு தேவையான வாக்குப் பெட்டிகள் உட்பட அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில், வைப்பது அவசியம். எனவே, வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று அவற்றின் தரம், நிலையை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் சிறிதளவு பழுதடைந்தவை, பயன்படுத்த இயலாத அளவுக்கு முழுமையாகப் பழுதடைந்தவை என தரம்பிரிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் சம்பந்தமாக ஏற்கனவே, மத்திய தலைமை தேர்தல் அதிகாரியிடம், வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இப்போது வாக்குப் பெட்டிகளைத் தயார் நிலையில் வைக்க கூறியிருக்கிறார்கள். இதனால், நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : மீன ராசியில் பயணிக்கும் சனி பகவான்..!! யோகத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்..!!

English Summary

The local elections are expected to be held by the end of November or the first week of December.

Chella

Next Post

என்னது.. ஆன்லைன் ஷாப்பிங்ல எந்த டிரஸ் வேணாலும் போட்டு பார்த்து வாங்கலாமா? அட ஆமாங்க.. மாஸ் காட்டும் AI அம்சம்..!!

Mon Sep 9 , 2024
Google has introduced an AI shopping tool. Through this, men and women can wear clothes virtually.

You May Like