fbpx

Local Holiday | தமிழ்நாட்டில் நாளை (ஆக.9) 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நாளை (ஆக.9) சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (ஆக.9) உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல சேலம் மாவட்டத்திலும் நாளை அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. அம்மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நாளை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த விழாவை காண தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். இதனை முன்னிட்டு நாளை சேலம் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை அனைத்து கல்வி நிறுவனங்களும், அரசு அலுவலங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Chella

Next Post

ராணிப்பேட்டையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு எதற்காக தெரியுமா…..?

Tue Aug 8 , 2023
ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதியான நாளை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக, அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தமிழ் கடவுளான முருகன் கோவில் மற்றும் இதர ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆகவே, பல மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், சேலம் மாவட்டத்தில் நாளை கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் […]

You May Like