நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் திருத்தப்பட்ட வங்கி லாக்கர் விதிகளுக்கு இணங்குவதை இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியது. புதிய வங்கி லாக்கர் விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்ட பிறகு, அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளன.
இதுபோன்ற சூழலில், புதிய லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. ஜனவரி 1, 2023 முதல் புதிய விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர்கள் உடனான அனைத்து லாக்கர் ஒப்பந்தங்களையும் மாற்றுமாறு வங்கிகளுக்கு மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 23, 2023 தேதியிட்ட செய்திக்குறிப்பின்படி, வங்கிகள் புதுப்பித்தல் செயல்முறையை இரண்டு கட்டங்களாக முடிக்கலாம். அதன்படி, 50% பணிகள் ஜூன் 30, 2023க்குள் முடிக்க வேண்டும், 75% பணிகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதன் காரணமாக எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்புகிறது. வாடிக்கையாளர்களும் இந்த வேலையை விரைவாக முடிக்க வேண்டும். வங்கிகளுக்கு டிசம்பர் 31, 2023 வரை கடைசி காலக்கெடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.