தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் மாத 4ஆம் தேதி வாகு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாவட்ட தேர்தல் ஆணையர் சத்யாபிரதா சாகு காணொளி மூலம் அலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு மக்களவை தேர்தல் செலவுக்காக ஒரு வேட்பாளர் ரூ.95 லட்சம் செலவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்த தமிழக அரசிடம் இருந்து ரூ.750 கோடி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ரூ.70 லட்சம் வேட்ப்பாளர் செலவு செய்யலாம் என இருந்த நிலையில் தற்போது ரூ.95 லட்சமாக அதிகரிப்பு.