fbpx

Lok Sabha Election | அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை..!! மீறினால் நடவடிக்கை..!!

இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்குரிமை உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையானது தின கூலி மற்றும் சாதாரண ஊழியர்களுக்கும் வழங்கப்படும். தேர்தலின் போது விடுமுறை அளிக்க மறுக்கும் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அதே சமயம் அவர்களுக்கு ஆர்பி சட்டத்தின்படி ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

இருந்தாலும் பணியாளர்கள் இல்லாதது ஆபத்தை ஏற்படுத்தும் அல்லது முதலாளிகளுக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தக்கூடிய வேலையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விடுமுறை விலக்கு அளிக்க நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More : Tasmac | தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

Good News | ஒரே தவணையாக நிலுவைத் தொகை..!! உடனே விற்பனை பத்திரம்..!! வீட்டு வசதி வாரியம் சூப்பர் அறிவிப்பு..!!

Mon Mar 18 , 2024
பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் வீட்டுவசதி வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் பல்வேறு திட்டங்களில் பொதுமக்களுக்கு மாதத்தவணை திட்டம், மொத்த கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதி திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வீடு ஒதுக்கப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் வீட்டுவசதி வாரிய திட்டங்களில், பொதுமக்கள் வீடு ஒதுக்கீடு பெறுகின்றனர். இப்படி ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தொகையை தவணை முறையில் […]

You May Like