Tasmac | தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை முன்னிட்டு 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் ஏப்ரல் 19ஆம் தேதியன்று வாக்களிப்பதற்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு அன்றும், ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் இயங்கக்கூடாது. அதனையும் மீறி, மது விற்பனை செய்தால் அல்லது டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

Read More : Seeman | சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடா..? வழக்கை இன்று அவசரமாக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!

Chella

Next Post

மதம் பிடித்த யானை போல திமுகவுக்கு பண வெறிபிடித்துவிட்டது!… Annamalai காட்டமான பேச்சு!

Mon Mar 18 , 2024
Annamalai: மதம் பிடித்த யானை, தன்னிலையை மறந்து சுற்றுவது போல, பண வெறி பிடித்து தி.மு.க., சுற்றிக்கொண்டிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர், துபாய், ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறார். வீட்டுக்கு வெளியே இருக்கும் பிரதமர், நாட்டு மக்களை சந்திக்கிறார். முதல்வர் வெளியே வர வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. தி.மு.க.,வினரும், முதல்வரை நகர்வலம் […]

You May Like