fbpx

Lok Sabha Elections: 57 வேட்பாளர்களின் 3வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

Lok Sabha Elections: மக்களவை தேர்தலில் 57 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டது.

நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், 7 கட்ட மக்களவை தேர்தலில் இதுவரை 2 பட்டியல்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது. இதன்படி, 82 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது.

அதனடிப்படையில், 57 வேட்பாளர்களின் 3வது பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, அருணாசல பிரதேசம், குஜராத், கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் போட்டியிட கூடிய வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியில் இருந்து காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் அக்கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடுவார். அவர் அந்த தொகுதியில் இருந்து இந்த முறை மீண்டும் போட்டியிடுகிறார்.

மேலும், முன்வைக்கப்பட்ட முக்கிய பெயர்களில், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரான எம்.வி. ராஜீவ் கவுடா, பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் மற்றும் குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் அமித் சாவ்டா, குஜராத்தின் ஆனந்த் தொகுதியில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவர்.

Readmore: பாஜகவின், தேர்தல் தோல்வி பயத்தால் டெல்லி முதல்வர் கைது..! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..!

Kokila

Next Post

Stalin: அனல்பறக்கும் தேர்தல் களம்!… இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

Fri Mar 22 , 2024
Stalin: மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திருச்சி இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 22) திருச்சியில் தொடங்குகிறார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் […]

You May Like