மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு கூட்டத்திற்கு பின்பும் காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்துள்ளது. இதற்கான தனியார் ஆய்வாளர்களையும் அக்கட்சி களமிறக்கியது. இதையடுத்து, இந்தியா கூட்டணி 280 முதல் 290 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ரிப்போர்ட் கொடுத்துள்ளார்களாம். அதனடிப்படையில் தான், கூட்டணி கட்சிகளை ஜூன் 1ஆம் தேதி அழைத்திருக்கிறது காங்கிரஸ்.
Read More : எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க இதை மறக்காம பண்ணுங்க..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!