தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை பரப்புரை மேற்கொள்ளலாம் என்றும் வழக்கமாக பிரச்சாரம் மாலை 5 மணியுடன் ஓயும் நிலையில், கோடைக்காலம் என்பதால் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். வரும் 19ஆம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் 18ஆம் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனையடுத்து, தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம். வரும் 17ஆம் தேதி பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடையவுள்ளது” என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Read More : ”பிரதமரின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் கிடையாது”..!! வெளுத்து வாங்கிய சரத்குமார்..!!