”பிரதமரின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் கிடையாது”..!! வெளுத்து வாங்கிய சரத்குமார்..!!

கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகா, விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் நல்ல திட்டங்களை செயல்படுத்தவில்லை. அதற்கு பதிலாக பாஜகவை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பெண்களுக்கு உரிமை தொகை, இலவச பேருந்து வசதி ஆகியவற்றை மக்களுக்கு வழங்கிவிட்டு திமுக அநாகரிகமாக பேசி வருகிறது. உலகமே பாராட்டும் தலைவராக இருக்கும் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அவர் மோடியின் கால் தூசிக்கு கூட சமம் இல்லை.

காங்கிரஸ், திமுக கட்சிகள் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக ஆக்கப்பூர்வமான திட்டத்தை செயல்படுத்தவில்லை. மீண்டும் மோடி பதவியேற்க அண்ணாமலைக்கு வாக்களியுங்கள்” என்று பிரச்சாரம் செய்தார்.

Read More : மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் விஜய்..!! ’விசில் போடு’ பாடலால் வெடித்த பூகம்பம்..!!

Chella

Next Post

Byju's CEO அர்ஜுன் மோகன் திடீர் ராஜினாமா!! காரணம் என்ன?

Mon Apr 15 , 2024
இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான பைஜூஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான பைஜூ, குறுகிய காலத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக செயல் அதிகாரியாக அர்ஜுன் மோகன் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாகவும், இதனால் பைஜூவின் நிறுவனர் ரவீந்திரன் தலைமைபொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]

You May Like