தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் இடுக்கி உட்பட மூன்று தொகுதிகளிலும் விசிக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். அதேபோல், ஆந்திராவில் போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.