fbpx

Lok Sabha | இன்று வெளியாகிறது லோக்சபா தேர்தல் தேதி..? நடத்தை விதிகள் உடனே அமல்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் இந்தியா முழுவதும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மாநிலங்கள் வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதன்பிறகு கடந்த 9ஆம் தேதி தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென்று ராஜினாமா செய்தார். இந்திய தேர்தல் ஆணைத்தை பொறுத்தவரை ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். ஆனால் பணி ஓய்வு, ராஜினாமா உள்ளிட்டவற்றால் 2 தேர்தல் ஆணையர்களும் இல்லாத நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பொறுப்பில் இருந்தார்.

இதனால் திட்டமிட்டப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவும் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்பபடுகிறது. வழக்கமாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக லோக்சபா தேர்தலை நடத்தி ஒரே நாளில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். அதன்படி, இன்று பிற்பகலுக்கு மேல் லோக்சபா தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வரும். இதையடுத்து அரசின் புதிய திட்டங்கள், புதிய அறிவிப்புகள் என்பது லோக்சபா தேர்தல் முடியும் வரை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ADMK-வில் கூண்டோடு ஐக்கியமான திமுக, அமமுக, ஓபிஎஸ் அணியினர்..!! மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் எடப்பாடி..!!

Chella

Next Post

Onion | ”வரத்து குறைவு விலை அதிகம்”..!! மீண்டும் எகிறும் சின்ன வெங்காயத்தின் விலை..!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

Fri Mar 15 , 2024
சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால் இல்லத்தரசிகள், உணவக உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினர் கவலையடைந்துள்ளனர். சமையலுக்கு பல்வேறு காய்கறிகள் இருந்தாலும் அதில் முக்கிய பங்கு வகிப்பது என்னவோ, வெங்காயமும், தக்காளியும் தான். இந்த இரண்டின் விலையும் அதிகரித்துவிட்டால், இல்லத்தரசிகள் மட்டுமல்ல உணவகம் வைத்து நடத்துபவர்கள் கூட திண்டாடுவார்கள். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில இருந்து விற்பனைக்காக காய்கறிகள் கொண்டுவரப்பட்டன. அதில், தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால், விற்பனை […]

You May Like