தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வாக்குச்சீட்டுகள் அச்சடிப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் :
* தபால் வாக்குச்சீட்டுகள் தயார் செய்யும் பணியை கண்காணிக்க ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
* வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை துவங்க வேண்டும்.
* ஒரு பண்டலுக்கு 50 வாக்கு சீட்டுகள் என்ற அடிப்படையில் கட்டி வைத்து அடையாள எண்கள் இட வேண்டும்.
* தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
* தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள அரசு அச்சகங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
* தபால் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி விவரங்களை கண்காணிக்க வேட்பாளர்கள் தங்களின் ஏஜெண்டுகளை நியமிக்கலாம்.
Read More : BREAKING | “புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்”..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு..!!