நகைக்கடையில் புகுந்த எலி அங்கிருந்த நெக்லஸ்-ஐ லாவகமாக தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெக்லஸ் ஒன்று காணாமல் போயிருந்தது. இதனைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து, கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் கடையின் சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி ஒன்று அந்த நெக்லஸ்-ஐ லாவகமாக தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், நகையை திருடும் திருடனை கவனமாக பாருங்கள் என்ற வாசகத்துடன் எலி அந்த நெக்லஸ்-ஐ தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மாயமான நெக்லெஸின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.