fbpx

செம திட்டம்..! “உங்களை தேடி உங்கள் ஊரில்”…! ஒரு நபருக்கு ரூ.10,000 வணிக கடன்…!

காஞ்சிபுரம் வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, பொது மக்களிடம் மனுக்கள் பெற்று, குறைகளைக் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, “மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, நேற்று காஞ்சிபுரம் வட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை குறித்து கேட்டறிந்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதியை பார்வையிட்டார்கள்.

பின்பு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள உயிர் மருத்துவ சேமிப்பு அறையை (BIO MEDICAL ROOM) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிணவறையை பார்வையிட்டார்கள். இதன் தொடர்ச்சியாக Radiology Department-ல் ஆய்வு மேற்கொண்டு, தீவிர இருதய சிகிச்சை பிரிவினையும் பார்வையிட்டு, கர்ப்பகால புறநோயாளிகள் பிரிவினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தொடக்கநிலை இடையீட்டுச் சேவை மையம் மற்றும் காசநோய் மையத்தினையும் பார்வையிட்டார்கள். மேலும் தொற்றாநோய் பிரிவினையும் மற்றும் ஆண்கள் பொதுநல புறநோயாளிகள் பிரிவினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பரிசோதனை அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, அரசு கால்நடை மருத்துவமனையை பார்வையிட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, இ-சேவை மையத்தினையும் பார்வையிட்டு, பணியாளர்கள் உடன் வட்டாட்சியர் கூட்ட அரங்கத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, கூட்டுறவு துறை சார்பில், (1 நபருக்கு ரூ.10,000 வீதம்) 7 நபர்களுக்கு ரூ.70,000 மதிப்பிலான சிறு வணிக கடன் காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Vignesh

Next Post

இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்!… கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா என எதிர்பார்ப்பு!

Thu Feb 1 , 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதன்படி, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் குறித்து ஜனாதிபதி திரவுதிபதி முர்மு தமது உரையில் சுட்டிக்காட்டி பேசினார். மேலும், உஜ்வாலா திட்டம் ,ஆயுஷ்மான் திட்டங்களின் நன்மைகள், பயனாளிகள் விவரங்களையும் பட்டியலிட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. மக்களின் வாழ்க்கையை […]

You May Like