ஆதார் அட்டை என்பது தனியார் மற்றும் அரசு தொடர்பான பல பணிகளுக்காக ஆடையாள சான்றாக பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாகும். இந்திய குடிமக்களுக்கான அடையாளமாக ஆதார் அட்டை (Aadhaar Card) அறியப்படுகிறது. பள்ளியில் சேர்க்கை பெறுவதோ, வங்கிக் கணக்கு தொடங்குவதோ அல்லது அரசுத் திட்டத்தில் பயன்பெறுவதோ அல்லது பிற வசதிகளைப் பெறுவதோ என நாம் அன்றாட வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டிய பல விதமான செயல்களுக்கு ஆதார் அவசியமாக ஆகி விட்டது. எனவே, ஆதார் அட்டை எங்காவது தொலைந்துவிட்டாலோ அல்லது தேவைப்படும்போது உங்களிடம் இல்லாமலோ இருந்தால், சிக்கல் ஏற்படலாம்.
ஆதார் அட்டை தொலைந்தால் உங்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும், ஆனால் அதை மீண்டும் பெறுவது கடினம் அல்ல. வீட்டில் இருந்த படியே ஆதார் அட்டையை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம் . ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வதற்கான எளிய வழியை இன்று அறிந்து கொள்ளலாம், இதன் மூலம் சில நிமிடங்களில் உங்கள் தொலைபேசியில் ஆதார் அட்டையைப் பெற முடியும்.
ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?: UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/portal என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். பின்னர் “Download Aadhaar” என்ற லிங்கை கிளிக் செய்யவும். தற்போது, உங்கள் என்ரோல்மென்ட் ஐடி அல்லது ஆதார் நம்பர், விர்ச்சுவல் ஐடி நம்பர் போன்றவற்றை என்டர் செய்யவும். அதன் பிறகு “Send OTP” என்பதைக் கிளிக் செய்யவும். ஆதார் கார்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும். தற்போது OTP நம்பரை என்டர் செய்து, “Download your e-aadhar card” என்பதைக் கிளிக் செய்யவும். OTP சரிபார்ப்புக்குப் பிறகு, நீங்கள் e-Aadhaar PDF-ஐ டவுன்லோட் செய்யலாம். தேவைப்பட்டால் நீங்கள் PDF-ஐ பிரிண்ட் எடுத்து லேமினேட் செய்யலாம்.
PVC ஆதார் கார்டு பெறுவது எப்படி?: UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது mAadhaar அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யலாம். இதில் உங்களுடைய ஆதார் நம்பர், என்ரோல்மென்ட் ஐடி மற்றும் விர்ச்சுவல் ஐடியை வழங்க வேண்டும். அதன் பிறகு ஓடிபி சரிபார்ப்புக்காக உங்கள் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி-ஐ வழங்கி முடித்தவுடன் பிவிசி ஆதாரை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். பிவிசி ஆதார் கார்டு பெற 50 ரூபாய் செலுத்த வேண்டும். அதிலிருந்து 5 முதல் 7 நாட்களுக்குள் உங்கள் வீட்டு முகவரிக்கே ஆதார் டெலிவரி செய்யப்படும்.