கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தில் மகளின் மாமனாருடன் தாய் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, 50 வயது பாட்டி தனது பேரனுடன் ஓடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பெல்வாரியா கிராமத்தில் உள்ள தலித் குடியிருப்பைச் சேர்ந்த 50 வயது பெண் இந்திராவதி. இவர், தனது பக்கத்து வீட்டுக்காரரான ஆசாத் என்ற இளைஞருடன் நீண்டகாலமாக காதலில் இருந்து வந்துள்ளார். அந்த 50 வயது பெண் காதலித்தது வேறு யாரும் இல்லை அவருடைய பேரனைத்தான். குறிப்பிடத்தக்க வயது வித்தியாசம், குடும்ப உறவு இருந்தபோதிலும், அவர்களின் காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.
இந்திராவதியின் 3-வது திருமணம் இதுவாகும். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரசேகர் என்பவருடன் 2-வது திருமணம் நடந்த நிலையில், அவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முதல் திருமணத்தில் ஒரு மகள் இருந்தாள். ஆனால், திருமணத்திற்கு பிறகு இந்திராவதிக்கும் சந்திரசேகருக்கும் இடையிலான உறவு பல ஆண்டுகளாக சுமூகமாக இல்லை.
அப்போது தான், ஆசாத் என்ற இளைஞனை இந்திராவதி காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள், சமூக உறவில் பாட்டி மற்றும் பேரனாகக் கருதப்படுகிறார்கள். இந்திராவதியின் கணவர் சந்திர சேகர் ஆசாத் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வேலை தேடி அடிக்கடி நகரத்திற்கு சந்திரசேகர் சென்று வந்த நிலையில், அந்த இளைஞருக்கும் இந்திராவுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
மேலும், தனது மனைவியும் ஆசாத்தும் சேர்ந்து தன்னையும் தனது குழந்தைகளையும் விஷம் வைத்து கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தால் வேதனையடைந்த சந்திரசேகர், தற்போது அவளை “இறந்துவிட்டதாக” கருதி அவருக்கு இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். சந்திரசேகர் கூறுகையில், தனது மனைவிக்கு இனி வாழ்க்கையில் எந்த இருப்பும் இல்லை. அவள் உயிருடன் இருக்கும்போதே அவரது இறுதிச் சடங்குகளை நடத்தி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.