சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹீட்டான திரைப்படம் லவ் டுடே இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவானா இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது என்று சொல்வதைவிட இந்த திரைப்படத்தின் கதை அம்சம் இளைய தலைமுறை மனதில் ஆழமாக பதிந்தது என்றே சொல்ல வேண்டும்.
அதோடு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அந்த கதை மிக விரைவில் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது. ஆனால் இந்தியில் இந்த திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி ரோலில் யார் நடிக்க போகிறார்கள் என்பது தொடர்பாக இதுவரையும் தெரியவில்லை.
இவானா தற்சமயம் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக நின்றிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது யார் என எல்லோரும் குழம்பிய நிலையில், அது அவருடைய உடன் பிறந்த சகோதரர் என்பது தெரிய வந்திருக்கிறது. இவானா உடன் பிறந்த இரட்டை சகோதரர் லியோ தான் அவர் என்றும் கூறப்படுகிறது.