fbpx

காதலியின் தோழிக்கு ரூட் விட்ட காதலன்..! தட்டிக்கேட்டதால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அதிர்ச்சி சம்பவம்..!!

லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த காதலியைக் காதலனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபால் நாட்டைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் தமி, கிருஷ்ண குமாரி. காதலர்களான இவர்கள் இருவரும் பெங்களூரு நகரில் வாடகைக்கு வீடு எடுத்துக் கடந்த ஒரு வருடமாக ’லிவிங் டுகெதர்’ முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், சந்தோஷ் தமி கடந்து 3 வருடங்களாக பெங்களூருவில் ஸ்பா ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் கிருஷ்ண குமாரியும் ஸ்பா ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் ஒரே துறையில் வேலை செய்து வந்ததால் இவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டு பிறகு காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்துதான் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

காதலியின் தோழிக்கு ரூட் விட்ட காதலன்..! தட்டிக்கேட்டதால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த போதிலும் சந்தோஷ் தமி பல பெண்கள் உடன் பழகி வந்துள்ளார். மேலும், காதலி கிருஷ்ண குமாரியின் நெருங்கிய தோழியிக்கு சந்தோஷ் தமி கடந்த சில வாரங்களாக காதல் வலைவீசியுள்ளார். இதையடுத்து, சம்பவத்தன்று காதலியின் தோழிக்கு வீடியோ கால் செய்து சந்தோஷ் சமி தொல்லை கொடுத்துள்ளார். அப்போது தோழியின் அருகே கிருஷ்ண குமாரி இருந்துள்ளார். பிறகு வீட்டிற்குச் சென்று காதலனுடன் இதுகுறித்துக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பிறகு சிறிது நேரம் கழித்து சந்தோஷ் தொலைப்பேசியில் இருந்து கிருஷ்ணகுமாரி தோழிக்கு வீடியோ கால் ஒன்று சென்றுள்ளது. அதில் கிருஷ்ணகுமாரியை சந்தோஷ் கடுமையாகத் தாக்கும் காட்சி இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த தோழி நண்பர்களை அழைத்துக் கொண்டு அவரது அறைக்குச் சென்றுள்ளார்.

காதலியின் தோழிக்கு ரூட் விட்ட காதலன்..! தட்டிக்கேட்டதால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அதிர்ச்சி சம்பவம்..!!

அப்போது அறையில் கிருஷ்ணகுமாரி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மற்றொரு புறம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷ் மது குடித்துக் கொண்டிருந்துள்ளார். பிறகு நண்பர்கள் கிருஷ்ண குமாரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ் சமியை கைது செய்தனர். விசாரணையில், தோழிக்கு காதல் தொல்லை கொடுத்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் காதலியை அடித்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த காதலியைக் காதலனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

Live Video..!! பெண் யூடியூபரை முத்தமிட முயன்ற இளைஞர்கள்..!! லைவ் வீடியோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Thu Dec 1 , 2022
இந்தியா வந்துள்ள தென்கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் யூடியூபர் ஒருவர் இரவில் மும்பையில் லைவ் வீடியோ பதிவு செய்த நிலையில், குறுக்கே புகுந்த இளைஞர்கள் அவரிடம் அத்துமீறி முத்தம் கொடுக்க முயன்று தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவை சேர்ந்தவர் மியோச்சி. இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு சென்று வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், மியோச்சி இந்தியா வந்துள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிரா […]
பெண் யூடியூபரை முத்தமிட முயன்ற இளைஞர்கள்..!! லைவ் வீடியோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like