fbpx

காத்துவாங்க போன காதலர்கள்..!! கத்தி முனையில் 3 பேர் செய்த சம்பவம்..!! நீலாங்கரையில் பரபரப்பு

கடற்கரையில் இரவில் தனிமையில் இருந்த காதலர்களை கத்தி முனையில் மிரட்டி போன்-பே மூலம் ரூ.40 ஆயிரத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் (25) என்பவர், கடந்த 14ஆம் தேதி இரவு நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் அருகே உள்ள கடற்கரையில் தனது காதலியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி காதலர்கள் வைத்திருந்த பையை சோதித்து பார்த்துள்ளனர். அதில் பணம் எதுவும் இல்லாததால், அவர்களது செல்போனை பிடுங்கி போன்-பே மூலம் அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் உள்ளதா? என பார்த்துள்ளனர்.

காத்துவாங்க போன காதலர்கள்..!! கத்தி முனையில் 3 பேர் செய்த சம்பவம்..!! நீலாங்கரையில் பரபரப்பு

அதில், பணம் இருந்ததை கண்ட அந்த 3 பேர், ரூ.40 ஆயிரத்தை போன்-பே மூலம் அவர்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து, முகமது உசேன் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து காதலர்களிடம் பணம் பறித்தவர்களின் வங்கிக் கணக்கை வைத்து விசாரித்தனர். அதில், பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த ஊசி உதயா (எ) உதயகுமார் (25), விக்கி (எ) விக்னேஷ் (27) ஆகிய 2 பேர் தங்களது கூட்டாளியுடன் சேர்ந்து, பணம் பறித்தது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், 2 பேர் மீதும் பள்ளிக்கரணை மற்றும் நீலாங்கரை காவல் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. பின்னர் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளி தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Chella

Next Post

உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் என்னென்ன? - தமிழக அரசு விளக்கம்

Tue Dec 20 , 2022
உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகளிடையே பிரபலமாகிவரும் உழவன் செயலியினை இதுவரை, சுமார் 12,70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த செயலி மூலம் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய […]

You May Like