fbpx

தனிமையில் இருந்த காதலர்கள்!… காதலனை நிர்வாணப்படுத்தி இளம்பெண் கூட்டு பலாத்காரம்!… மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிராவில் காதலர்கள் தனியாக பேசிக்கொண்டிருந்ததை செல்போனில் படம் எடுத்து மிரட்டி இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரேங்கியுள்ளது

மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் மலை பகுதியில் ஜிவ்தானி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே காதலர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மது அருந்தவந்த நண்பர்கள் இருவர், தனிமையில் இருந்த ஜோடியை செல்போனில் படம் எடுத்து அதை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டி வாலிபரிடம் பணம் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது தனது காதலியிடம் அத்துமீற முயன்றதாகவும், இதனால் கோபமடைந்த காதலன், போதை ஆசாமிகளை பீர்பாட்டிலை கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், காதலனை நிர்வாணப்படுத்தி கட்டிப்போட்டுவிட்டு, இளம்பெண்ணை மலையின் மற்றொரு பகுதிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த கும்பலிடம் இருந்து இளம்பெண் தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கட்டுகளை அவிழ்த்து மலையை விட்டு இறங்கிவந்த காதலன் அங்கிருந்த மக்களிடம் உதவிக்கேட்டதாகவும், ஆனால், அவர் நிர்வாணமாக இருந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உதவிக்கு யாரும் வரவில்லை என்றும் தெரியவந்தது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், போதை ஆசாமிகளையும் இளம்பெண்ணையும் தேடிவந்தநிலையில், கும்பலை சேர்ந்த ஒருவரை தான் தலையில் தாக்கியதாக காதலன் கூறியுள்ளார்.

இதையடுத்து, அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரனை முடுக்கிவிடப்பட்டது. அப்போது அருகில் உள்ள மருத்துவமனையில் தலையில் அடிபட்டு சிகிச்சை பெரும் நோயாளி பற்றிய தகவல் புகைப்படத்துடன் காவல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள நபரை காதலர் அடையாளம் கண்டதும் காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து தீரஜ் சோனியை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் லட்சுமண் ஷிண்டேயையும் கைது செய்தனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார், அவர்கள் மீது கூட்டு பலாத்காரம், இயற்கைக்கு மாறான உறவு, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Kokila

Next Post

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!... தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம்!

Sun Mar 26 , 2023
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா அளவை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஆறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மூன்று மற்றும் கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்டில் இருந்து […]

You May Like