fbpx

3 நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,040க்கு விற்பனையாகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

எனவே தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,380க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,040க்கு விற்பனையாகிறது..

இதே போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசு உயர்ந்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,500க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை, சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் இன்று ரூ.80 குறைந்துள்ளது..

Maha

Next Post

மத்திய அரசு தேர்வில் ஆள்மாராட்டம் செய்த அரியானாவை சேர்ந்த 4 பேர் அதிரடி கைது….! கோவையில் பரபரப்பு….!

Wed Mar 15 , 2023
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்திருக்கிறது. மத்திய அரசின் பண மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டனர். நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இதற்கு விண்ணப்பம் செய்திருந்தார்கள். எழுத்து தேர்வு கடந்த மாதம் 4ம் தேதி கோவையில் நடந்தது. தேர்வு எழுத வந்தவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இந்த […]

You May Like