fbpx

குறைந்த வட்டியில் கடனுதவி..!! விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!! இவர்களுக்கு முன்னுரிமை..!!

எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் விளைநிலம் மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் வாங்குவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதாவது பிறர் சமூகத்தினரிடம் இருந்து விலை நிலங்களை எஸ்சி, எஸ்டி மக்கள் வாங்கும்போது, நிலங்களுக்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

நிலத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்றவாறு 50% வரையிலும், அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரையிலும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மானியம் போக மீதம் இருக்கும் தொகையை விவசாயிகள் கடனாக பெற்றுக்கொள்ளலாம் என ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விவசாயிகளுக்கு 6 சதவீத வட்டி வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

குட் நியூஸ்..!! 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு இனி ரூ.300..!! அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு..!!

Thu Nov 23 , 2023
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் புதிய குடிநீர் திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசுகையில், ”தமிழ்நாடு முதல்வர் மக்களின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விடுபட்ட பெண்கள் குறித்து மூன்றாவது முறையாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையில் 100 […]

You May Like