fbpx

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு..

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர கடலோர பகுதிகளை வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..

வரும் 12 முதல் 14-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் கர்நாடக கடலோர பகுதிகள்,லட்சத்தீவு, வடக்கு கேரள கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல், கர்நாடக கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல், ஆந்திர கடலோர பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌.. எனவே இன்று முதல் வரும் 14ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

தொலைதூர கல்வி சான்றிதழ்... நேரடி வகுப்பு சான்றிதழுக்கு சமமானது... யு.ஜி.சி அறிவிப்பு..!!

Sat Sep 10 , 2022
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து தொலைதூர கல்வி மற்றும் ஆன்லைன் மூலம் கற்கும் முறையில் பெறப்படும் பட்டங்கள், நேரடி வகுப்புகள் மூலம் வாங்கும் பட்டங்களுக்கு சமமானது என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்து இருக்கிறது. இது குறித்து யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திறந்த நிலை, தொலைதூர கல்வி முறை மற்றும் ஆன்லைனில் கற்கும் முறை மூலம் பெறப்படும் இளங்கலை, முதுகலை பட்டங்கள், முதுகலை பட்டயப்படிப்பு சான்றிதழ்கள் […]

You May Like