fbpx

குறைந்தது சமையல் எண்ணெய் விலை..!! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!! எவ்வளவு தெரியுமா..?

மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று, சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், விலையை 6 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளன.

சர்வதேச அளவில், சமையல் எண்ணெய் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதை அடுத்து, அவற்றின் விலையை குறைந்துள்ளன. இதையடுத்து, சமையல் எண்ணெய் சில்லரை விற்பனை விலையை குறைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று, சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், விலையை 6% வரை குறைக்க முடிவு செய்துள்ளன. சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கமான, எஸ்.இ.ஏ., அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த இரண்டு மாதங்களில், எண்ணெய் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் விலை கடுமையாக குறைந்துள்ளது. நிலக்கடலை, சோயா பீன்ஸ், கடுகு உற்பத்தி அமோகமாக இருந்தும், சர்வதேச அளவிற்கு உள்ளூர் சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறையவில்லை. தற்போதைய உள்ளூர் சந்தை விலை அதிகளவில் இருப்பதாக தெரிகிறது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம், சமையல் எண்ணெய்களின் சில்லரை விற்பனை விலையைக் குறைத்து, பலனை நுகர்வோர்களுக்கு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் பல சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவனை 2️ நாட்களாக பார்க்க வராததால் ஆத்திரம்…..! மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் விழுப்புரம் அருகே பரபரப்பு…..!

Thu May 4 , 2023
விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் வசித்து வரும் சரத்குமார் என்பவரின் மனைவி பரணி. இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக வரும் நோயாளிகளை பதிவு செய்யும் பணியில் இருந்து வருகிறார்.அவருடைய கணவர் 2 நாட்களுக்கு முன்னால் விஷம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய நிலையில், அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த சரத்குமாரின் மனைவி பரணியிடம் […]

You May Like