நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை வெகுவாக அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனை குறைப்பதற்கான நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தான் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விநியோகத்தை செய்து வருகிறது. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலையை பொருத்து தான்,இந்த நிறுவனங்கள் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.
சென்ற இரண்டு வருட காலமாகவே, சிலிண்டரின் விலை வெகுவாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டரின் விலை 1,118 என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆயிரம் ரூபாயை கடந்த சிலிண்டரின் விலையால், சாமானிய மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இதற்கு நடுவே, மத்திய அரசு வழங்கும் சிலிண்டருக்கான மானிய தொகை வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. என்ற புகார் எழுந்து வருகிறது. இந்த மானிய தொகையும் சிலருக்கு கிடைக்காததால், சிலிண்டருக்கு மட்டும் அதிக எண்ணிக்கையிலான பணத்தை செலவிட வேண்டிய சூழல் இருப்பதாக, இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.