நவம்பர் மாதத்தில் 13ம் தேதி 2 கிரகங்கள் 2 ராசிகளில் மாறப் போகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் என்பது மிகவும் முக்கியமானதாகக் கூறுகின்றனர் ஜோதிடர்கள். அன்றைய தினத்தில் ரிஷப ராசியில் செவ்வாய் கிரகம், விருச்சிக ராசியில் புதன் கிரகமும் சஞ்சரிக்கப் போகின்றனர். மேலும் புதன் மற்றும் செவ்வாய் இரண்டு ராசிகள் மாறுவதால் அதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நிச்சயம் 13 ம் தேதி சுப பலன்கள் கிடைக்கும்.
அன்னை லட்சுமியின் தாயின் கடைக்கண் பார்வை உங்களுக்கு பண ஆதயத்தைக் கொடுக்கும்.
வேலையில் வெற்றி என்பது உண்டாகும்.வாகனம் மற்றும் புதிய வீடு வாங்கும் வாய்ப்புகள் நிகழும்.
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழுவதுமாக கிடைக்கும். அதிக நேரத்தை குடும்பத்துடன் செலவிடுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் புதுமையாகவும் மங்களகரமாகவும் இருக்க கூடும்.
பண வரவு அதிகரிக்கும். மேலும்
திருமண வாழ்க்கையில் சண்டைகள் குறைந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள்.
குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடும் திசை உண்டாகும்.கல்வித் துறையுடன் இணைந்து மற்றும் தொடர்புடையவர்ளுக்கு கொஞ்சம் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நவம்பர் 13ம் நாள் ஒரு வரப்பிரசாதமாகவே அமையும் என கூறப்படுகிறது.
வாழ்க்கைத்துணையின் ஆதரவு பெருமளவு கிடைக்கும்.
ஆன்மீக மற்றும் மதம் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். லக்ஷ்மியின் அருளால் எல்லா செல்வமும் லாபமும் உண்டாகும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சுப பலன்களை அன்றைய தினத்தில் பெறுவார்கள். பொருளாதாரம் மிக வலுவாக இருக்கும். புதிய வேலை மற்றும் தொழில் தொடங்கவும் இது நல்ல நேரம். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு இந்த நேரம் வரப்பிரசாதம் அல்ல. மேலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அன்னை லட்சுமி அந்த கால கட்டத்தில் பண வரவைக் கொடுப்பார்.