Gold: இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிப்.11-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது. ஆனால் அதற்கடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தது.
சென்னையில் நேற்று (பிப்.14-ஆம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,990-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்.15-ஆம் தேதி) தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.7,880-க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு சவரன் ரூ.63,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Readmore: சோகம்.. மகா கும்பமேளாவிற்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பக்தர்கள் உயிரிழப்பு..!!