fbpx

’மச்சா எவ்ளோடா குடிச்சோம்’..!! கள்ளச்சாராயம் அடித்துவிட்டு மட்டையான காட்டு யானைகள்..!!

இலுப்பை பூ சாராயம் குடித்த யானைக் கூட்டம் ஒன்று, போதையில் படுத்து உறங்கிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள உள்ள பல்வேறு பழங்குடியின குழுக்கள் இலுப்பை மர பூக்களை நீரில் ஊறவைத்து சாராயம் தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், இலுப்பை பூ சாராயம் தயாரிக்கப்பட்டது. கிராமத்தின் அருகே உள்ள முந்திரிக்காட்டு பகுதியில் பெரிய பானைகளில் தண்ணீர் ஊற்றி, அதில் இலுப்பை பூவை போட்டு ஊறவைத்துள்ளனர். அதில் இருந்து மக்குவா என்ற நாட்டு சாராயம் தயாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

’மச்சா எவ்ளோடா குடிச்சோம்’..!! கள்ளச்சாராயம் அடித்துவிட்டு மட்டையான காட்டு யானைகள்..!!

மறுநாள் வந்து பார்த்த போது பானைகள் எல்லாம் உடைந்து கிடந்துள்ளது. மேலும், அதன் அருகில் 24 யானைகள் நன்கு உறங்கிக் கொண்டிருந்தன. கிராம மக்கள் யானைகளை எழுப்ப முயற்சித்தும் யானைகள் புறண்டு கூட படுக்கவில்லை. இதனையடுத்து, கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் வந்து பெரிய மேளங்கள் அடித்து சத்தம் எழுப்பினர். அதன் பின்னர் யானைகள் உறக்கம் கலைந்து காட்டுக்குள் ஓடின. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், சாராயம் குடித்து தான் யானைகள் மட்டையாகின என கூற முடியாது. சதாரணமாக கூட தூங்கியிருக்கலாம் என்கின்றனர். ஆனால், சாராய பானைகள் உடைந்திருப்பதை கண்ட ஊர் மக்கள், யானை நிச்சயம் சாராயம் குடித்து தான் உறங்கியதாக அடித்து சொல்கின்றனர்.

Chella

Next Post

அசத்தல்...! வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் 25-ம் தேதி வரை நீட்டிப்பு...!

Fri Nov 11 , 2022
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்; வருமான வரி சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம், 1961 பிரிவு 12 ஏபி/80ஜி/10(23சி)/35(1) யின் கீழ் பதிவு/ அங்கீகாரம் பெறுவதில் நிதிச்சட்டம் 2020 மற்றும் 2021 புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறைகளின் […]

You May Like