இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
ஆசியா கோப்பை 2023ன் 2வது ஆட்டம் பங்களாதேஷ் மற்றும் இலங்கை இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் பேட்டர்களில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ-வை தவிர மற்ற பேட்டர்கள் இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அணிக்காக தொடர்ந்து போராடிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ 122 பந்துகளில் 89 ரன்கள் ஆட்டமிழந்தார். இறுதியில் பங்களாதேஷ் அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணி சார்பில் ஆபரமாக் பந்துவீசிய மதீஷா பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் தீக்ஷனா 2 விக்கெட்டுகள், தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லலகே, தசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 165 என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.