சென்னை கோயம்பேட்டில் கடந்த 2007ம் ஆண்டு கிராம நத்தம் நிலத்தை வாங்கி தனியார் மருத்துவமனை கட்டினார் திமுக எம்பி கலாநிதி வீராசாமி. இந்த நிலையில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மருத்துவமனையை கட்டியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு செய்த மெட்ரோ இடத்தை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவை ஏற்காவிட்டால் எம்பியை வெளியேற்றுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கம் என்பது அரசியல்வாதிகள் மற்றும் கட்சிக்காரர்களுக்கானது மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும் இடமுண்டு. அரசாங்கம் என்பது ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்த வேண்டும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும்” என்று கூறி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மனுவை தள்ளுபடி செய்தார்.
மனுதாரர் கலாநிதி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர், எனவே தற்போதைய வழக்குகளில் அரசியல் துஷ்பிரயோகத்திற்கான வாய்ப்பை மறுக்க முடியாது. பணபலம், அரசியல் பலம் உள்ளவர்கள் மட்டுமே, ‘கிராம நத்தம்’ நிலங்களை சுரண்டுவதற்காகவும், அநியாயமான லாபங்களுக்காகவும் ஆக்கிரமிக்க முடியும், இது வீடற்ற ஏழை மக்களின் உரிமைகளை மீறுவதற்கு வழிவகுக்கும். அக்டோபர் 15ம் தேதிக்குள் அரசு நிலத்தை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.