fbpx

சட்டம் படித்திருக்கிறீர்களா? சென்னை, மதுரை உயர் நீதிமன்றத்தில் வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் உள்ள 30 ஆராய்ச்சி சட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு தான் அது. 1 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணிக்கு குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் : ஒரு ஆண்டு காலத்திற்கு முழு நேர ஆராய்ச்சி சட்ட உதவியாளர் (Research Law Assistant) பணி.

மொத்த காலி பணியிடங்கள் : 30

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் கீழ் சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அரியர் இல்லாமல் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்திய பார் கவுன்சில் மூலம் வழக்கறிஞர் என்பதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் ஆராய்ச்சி சட்ட உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்? இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு குழுவின் மூலம் நடத்தப்படும் viva voce தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் முறை குறித்து தேர்வு குழுவே முடிவெடுக்கும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 11, 2024.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு https://hcmadras.tn.gov.in/ என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் கொண்டுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இமெயில் முகவரியிலும் அனுப்பி வைக்க வேண்டும்.

Read more ; இரவில் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! காலையில் கட்டாயம் இது இருக்கணும்..!!

English Summary

Madras High Court has published an employment notification for law graduates.

Next Post

நவம்பர் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை...! வானிலை மையம் தகவல்...!

Sun Oct 27 , 2024
No chance of heavy rain till November 1

You May Like