fbpx

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு கடந்த 10 மற்றும் 11ஆம் தேதிகளில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று பிறப்பிக்கிறார்.

Chella

Next Post

“ முஸ்லீம்கள் தங்கள் இளைஞர்களை கட்டுப்படுத்தவில்லை எனில், இந்துக்கள்...” பாஜக தலைவர் எச்சரிக்கை..

Wed Aug 17 , 2022
முஸ்லீம்கள் தங்கள் இளைஞர்களை கட்டுப்படுத்தவில்லை எனில், இந்துக்கள் அதை செய்வார்கள் என்று பாஜக தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.. கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “இந்துஸ்தானில் முஸ்லிம்கள் வசிப்பதால், இந்து பண்டிகைகளுக்கு ஒத்துழைப்பது அவர்களின் கடமை.. விநாயகர் சதுர்த்தி வரப் போகிறது.. நான் யாரிடமும் (அமைதியைப் பேணுமாறு) வேண்டுகோள் விடுக்கவில்லை. நீங்கள் (முஸ்லீம்கள்) ஹிந்துஸ்தானில் இருக்கிறீர்கள், இந்துக்களின் பண்டிகையான […]

You May Like