மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக குரங்கு குல்லா அணிந்த திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. சுமார் 10 பேர் கொண்ட இந்த கும்பல் நள்ளிரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிட்டு ஆளில்லாத வீட்டை தவிர ஆட்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உள்ளேயும் தைரியமாக நுழைந்து விடுகிறார்கள். வீட்டுக்குள் இருப்பவர்களை இவர்கள் தாக்கி கொள்ளை அடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் நேற்று கோவில் பாப்பாக்குடி ஏ.ஆர் சிட்டி பகுதியில் நுழைந்த இந்த கொள்ளை கும்பல் அந்தப் பகுதியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் கேட்டின் வழியாக ஏறி குதித்தனர். அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதை தாமதமாக கவனித்த அவர்கள் அதனை அடித்து நொறுக்கி உள்ளனர்.
அதன் பிறகு வீட்டிற்கு உள்ளே குடித்து பூட்டையும் உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு வெடித்த வீட்டின் உரிமையாளர் மாடி பால்கனியிலிருந்து சத்தம் போட்டதால் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிள்ளனர். அதோடு கோபத்தில் அவர் மீது கற்களையும் வீசி இருக்கின்றனர்.
இந்த சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் இருந்த மூதாட்டியிடம் செயினை பறித்து சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் ஒரே இரவில் மட்டும் 4 வீடுகளில் இதே போல கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
ஒருவேளை மக்கள் இவர்களைப் பிடித்து விட்டால் தப்பித்து செல்வதற்கு ஏதுவாக உடம்பில் எண்ணெய் மற்றும் சேறு உள்ளிட்டவற்றை வீசியபடி இந்த கும்பல் வலம் வருகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி மக்கள் சிலர் புகார் வழங்கியிருக்கின்ற நிலையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து இவர்களை கண்டுபிடித்து பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்னதாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.