fbpx

அடுத்த 5 நாட்கள் இரயில் சேவை ரத்து.. செந்தூர் எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்..!! – தெற்கு ரெயில்வே 

நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதன் காரணமாக நாளை முதல் வருகிற 8-ம் தேதி வரை 5 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக இந்த ரெயில் நாளை முதல் வருகிற 8-ம் தேதி [வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை] வரை 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8.25 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத்தில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 6, 8, 10 ஆகிய தேதிகளில் இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, மதுரையிலிருந்து தினமும் காலை 6.50 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – ராமேஸ்வரம் ரயில் (06651) வருகின்ற 3 ஆம் தேதி காலை 08.05 மணிக்கும் (75 நிமிடங்கள் காலதாமதமாக), 4ஆம் தேதி காலை 08.10 மணிக்கும் (80 நிமிடங்கள் காலதாமதமாக) புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தை அறிந்து கொண்டு பயணிகள் தங்களது பயண நேரத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம், ரயில் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read more ; அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!!

English Summary

Madurai Railway Division has announced that the departure time of Madurai – Rameswaram and Tiruchendur – Chennai Egmore trains has been changed due to track maintenance work.

Next Post

பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து மூளை, கல்லீரல், இதயத்தை சமைத்து சாப்பிட்ட மகன்..!! தூக்குல போடுங்க..!! நீதிபதிகள் தீர்ப்பு..!!

Thu Oct 3 , 2024
This gruesome murder has shaken the conscience of the society. A person who has eaten cannibals is unlikely to repent.

You May Like