தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகள் ரபீனா (24). மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இருக்கின்ற ஒரு ஐடி நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை வேலை முடிந்து மேலூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தார் வழியில் 2 ஆண்கள் அந்த ஆட்டோவில் ஏறி உள்ளனர்.
சிறிது தூரம் சென்ற நிலையில், அவர்கள் இருவரும் ரபீனா அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துள்ளனர். அதன் பிறகு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். காயமடைந்த ரபீனா மாட்டு தாவணி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் பெயரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட ஆட்டோ பதிவு எண்ணை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.