மகளிர் உரிமைத் தொகை ஜனவரியில் புதிய விண்ணப்பம் பெறப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பெண்கள் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் சில நிபந்தனைகள் வகுத்து வெளியிடப்பட்டன. இந்த திட்டம் மூலம் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்குக்கு 4வது தவணை ரூ.1,000 நாளை அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு விண்ணப்பங்களின் ஏற்கப்பட்ட, அனைவரது வங்கி கணக்குகளுக்கும் இந்த தொகையானது செலுத்தப்பட உள்ளது. கடந்த இரண்டு மாதமாக பதினைந்தாம் தேதிக்கு முன்னதாக வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. அதனைப் போலவே நாளை மதியத்திற்கு மேல் பணம் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்கள் வரும் ஜனவரி மாதம் முதல் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். எந்த ஒரு தகுதியான பயனாளியின் வாய்ப்பும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின்படி அரசு மிக கவனமாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.