மகராஸ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த காவல் அதிகாரி சோம்நாத் ஷிண்டே. கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் இவர், ட்ரீம் 11 என்ற ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு 1.5 கோடி வரை சம்பாதித்துள்ளார். இந்த பணத்தை வைத்து வீடு வாங்கவும், தனக்கு இருந்த கடனையும் அடைக்க முடிவு செய்துள்ளார். அதோடு, தனக்கு கிடைத்த பணம் குறித்து, காவல்துறை சீருடை அணிந்தபடியே செய்தியாளர்களுக்கு பிரஸ்மீட்டும் அளித்துள்ளார்.
இதையடுத்து, காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறி அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார் மகராஸ்டிரா டிஜிபி. மேலும் ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இணை கமிஷனர் ஸ்வப்னா நியமிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 7,535 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ட்ரீம் 11 நிறுவனத்தின் மீது பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக புகார் உள்ளதாகவும், சுமார் 1 கோடியே 10 லட்சம் பேர் இந்த ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்ட பிறகு, ஏராளமானோர், இந்த கேமை பயன்படுத்துவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, தோனி உள்ளிட்டவர்கள் இந்த விளையாட்டை பிரபலப்படுத்த விளம்பர தூதர்களாக நடித்துள்ளது குறிப்பிடதக்கது.