வங்கிகள் பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும். உள்ளூர் திருவிழா அல்லது வேறு ஏதேனும் பண்டிகைகள் காரணமாகவும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.. அந்த வகையில், மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்றான மகாசிவராத்திரி, இன்று கொண்டாடப்படுகிறது.. எனவே, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இந்த தேதியில் வங்கிகள் மூடப்படும். வங்கி தொடர்பான பணிகள் ஏதேனும் இருந்தால், உங்கள் நகரத்தில் வங்கிகள் திறக்கப்படுமா அல்லது மூடப்படுமா என்பதை தெரிந்துகொள்வது அவசியம்..
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இருப்பினும்.. குறிப்பாக உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், பீகார், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படும். இதன் விளைவாக, லக்னோ, ராஞ்சி, அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், டேராடூன், ஹைதராபாத், ஜம்மு-காஷ்மீர், கான்பூர், கொச்சி, நாக்பூர், ராய்ப்பூர், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் இந்த நேரத்தில் மூடப்படும்.
மறுபுறம், டெல்லி, கோவா, பீகார், திரிபுரா, மிசோரம், சண்டிகர், தமிழ்நாடு, சிக்கிம், அசாம், மணிப்பூர், ராஜஸ்தான், வங்காளம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்களில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்..
பிப்ரவரி 2023க்கான வங்கி விடுமுறைகள் :
- பிப்ரவரி 19, 2023 – ஞாயிறு
- பிப்ரவரி 20, 2023 – மாநில நிறுவன தினம் (மிசோரம்)
- பிப்ரவரி 21, 2023 – லோசார் நாள் (சிக்கிம்)
- பிப்ரவரி 25, 2023 – 4-வது சனிக்கிழமை
- பிப்ரவரி 26, 2023 – ஞாயிறு விடுமுறை
எனினும் வங்கி விடுமுறை நாட்களிலும் கூட வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், ஏடிஎம் மற்றும் பிற மொபைல் செயலிகள் மூலம் வங்கிச் சேவைகளை அணுகலாம். ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்ற UPI ஐப் பயன்படுத்தலாம், மேலும் பரிவர்த்தனைகளை நடத்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம். இந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம், வங்கிகள் மூடப்பட்டிருக்கும் நாட்களிலும் வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிகளைத் தொடர்ந்து நிர்வகிக்க முடியும்.