பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வீடுகளுக்கு வந்த உடன் என்ன சாப்பிடலாம் என்று தான் நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகள் விரும்பும் முக்கியமான ஸ்நாக்ஸ் என்றால் அது பிஸ்கட் தான். பிஸ்கட் மட்டும் இருந்தால் குழந்தைகள் உணவுகளை கூட சாப்பிட மறுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு பிஸ்கட் குழந்தைக்கு முக்கியமான ஒரு பொருளாக மாறிவிட்டது.
ஆனால், பிஸ்கட் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை எதுவும் கிடையாது. மாறாக, பல தீமைகள் தான் ஏற்படும். பிஸ்கட் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், சீக்கிரம் கெட்டுப்போகக் கூடாது என்பதற்காகவும் கண்ட கெமிக்கல்களை பிஸ்கட்களில் சேர்க்கின்றனர். இதனால் முடிந்த வரை கடைகளில் உலா பிஸ்கட் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
ஆனால் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் கொடுக்கலாம் என யோசிக்கிறீர்களா? அதுவும், குழந்தைகள் விரும்பும், வீட்டிலேயே ஈசியா செய்யுற மாதிரி இருக்கணுமா? இனி நீங்க ரொம்ப யோசிக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஆம், வெறும் 3 பொருட்களை வைத்து வீட்டிலேயே எளிதாக டீக்கடை பிஸ்கட் செய்யலாம். டீக்கடை பிஸ்கட்-ஐ எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்க..
இந்த பிஸ்கட் செய்ய தேவையான பொருள்கள்: நாட்டுச்சர்க்கரை, நெய், ஏலக்காய், கோதுமை மாவு, உப்பு. பிஸ்கட் செய்ய, முதலில் நாட்டுச்சர்க்கரையை அரைத்து பொடியாக எடுத்துக் கொள்ளவும். உங்களுக்கு வேண்டுமானாலும் நீங்கள் நாட்டுச்சர்க்கரையை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது நட்டுச்சர்க்கரையுடன் சேர்த்து சிறிது ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்..
இப்போது ஒரு பாத்திரத்தில், 100 கிராம் நெய் சேர்த்து, அதை க்ரீம் பதத்திற்கு வரும் வரை நன்கு அடித்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த நெய்யுடன் சேர்த்து அரைத்து வைத்த சர்க்கரைப் பொடி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளுங்கள். இப்போது 150 கிராம் சலித்த கோதுமை மாவை அதனுடன் சேர்த்து, கைகளால் நன்றாகப் பிசையவும்.
மாவு மிருதுவாக மாறின உடன், இட்லி தட்டில் அல்லது குக்கர் அல்லது மைக்ரோவேவ் அவன், கனமான கடாய் என எதில் வேண்டுமானாலும் வேக வைத்து எடுத்தால் சுவையான டீக்கடை பிஸ்கட் ரெடி. இதில் எந்த கெமிக்கலும் இருக்காது. கோதுமை மாவு சேர்த்திருப்பதால் ஆரோக்கியமானதும் கூட. இதில் நீங்கள் கோதுமைமாவிற்கு பதில் ராகி மாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.