fbpx

Malavika Mohanan : தோழியுடன் மொட்டை மாடியில் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா தனது தோழியுடன் மொட்டை மாடியில் சிலம்பம் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போலெ’ படத்தின் மூலம் அறிமுகமானார்.  தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா. ஹீரோவோடு சேர்ந்து இவருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது என்பதால் சிலம்பம் சுற்றக் கற்றுக் கொண்டார். 

இப்போது படப்பிடிப்பு முடிந்த பின்னரும் சிலம்பம் சுற்றும் பயிற்சியை அவர் கைவிடவில்லை. தனது பக்கத்து வீட்டுத் தோழியுடன் அப்பார்ட்மெண்ட் மாடியில் சிலம்பம் சுற்றியிருக்கிறார் மாளவிகா. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து விடுவார். தற்போது தனது தோழியுடன் சிலம்பம் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ’சிலம்பம் சுற்ற இப்படி ஒரு தோழி கிடைப்பது சூப்பர்!’ எனப் பதிவிட்டுள்ளார். தோழியுடன் மாளவிகா மோகனன் ரிலாக்ஸாக இருக்கும் புகைப்படங்களுக்கு அவரின் ரசிகர்கள் ஹார்ட்டின்களை சிதறவிட்டு வருகிறார்கள். இவரிடம் ரசிகர்கள் கமெண்ட்டில் ‘தங்கலான்’ படம் எப்போது ரிலீஸ் எனக் கேட்டு வருகின்றனர். ஏனெனில், ‘தங்கலான்’ படம் இந்த வருடம் கோடைக் கொண்டாட்டமாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட ரிலீஸ் தள்ளிப் போனது. இன்னும் படம் எப்போது ரிலீஸ் என அறிவிக்கப்படாமல் இருக்கிறது. 

Next Post

கோர விபத்தில் மணமகன் உட்பட 6 பேர் பலி!… திருமண ஷாப்பிங்கிற்காக சென்றபோது நிகழ்ந்த சோகம்!

Sun May 19 , 2024
Accident: ஆந்திராவில் திருமணத்திற்கு ஷாப்பிங் சென்றபோது நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி மணமகன் உட்பட பேர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பெரோஸ் பாஷா(30). இவருக்கு சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், திருமணத்திற்காக தனது குடும்பத்தினர் 7 பேருடன் காரில் ஹைதராபாத்துக்கு ஷாப்பிங் சென்றுள்ளார். இதையடுத்து, வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பாச்சுபள்ளி அருகே எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]

You May Like