பிரபல பாடலாசிரியர் பீயர் பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
பாடலாசிரியரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான பீயர் பிரசாத் சங்கனாச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 62. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு, கடந்த நவம்பரில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மண்கொம்பு என்ற இடத்தில் பிறந்தார், அவர் தனது இளமை காலத்திலிருந்தே நாடக நடிப்பில் தீவிரமாக இருந்தார், பல நாடகங்களை எழுதி இயக்கி உள்ளார். அவர் 1993 இல் சங்கீத் சிவன் இயக்கிய ஜானி திரைப்படத்திற்கு வசனம் எழுதி மலையாளத் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த ஆண்டு சிறந்த குழந்தைகள் படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதை இப்படம் வென்றது.
பின்னர் பாடலாசிரியராக அவரது பணி தொடங்கியது. மோகன்லால் மற்றும் சௌந்தர்யா நடித்த கிளிச்சுண்டன் மாம்பழத்திற்கு பாடலாசிரியராக அவரைத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாளத்தில் இவர் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவரது இழப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.