fbpx

“என்னடா உருட்டு புதுசா இருக்கே..” பிரதமருக்கு விமர்சனம்.! வெளியுறவு துறை அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்தா.?

பிரதமர் நரேந்திர மோடியை சமூக வலைதளங்களில் கேலி செய்த மாலத்தீவு அரசியல்வாதி இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடி இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கரைகளின் அழகு மற்றும் பவளப்பாறைகள் பற்றியும் லட்சத்தீவின் சுற்றுலா சிறப்பம்சங்கள் பற்றியும் தனது எக்ஸ் வலைதளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்திருந்தார்

இந்நிலையில் மாலத்தீவின் அரசியல்வாதி ரமீஸ் மற்றும் மாலத்தீவு இணையமைச்சரான மரியம் ஷியூனா ஆகியோர் இந்தியா பற்றியும் லட்சத்தீவு பற்றியும் அவதூறு கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர். மேலும் இந்திய விடுதிகளின் தரம் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்கு எழுந்த பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து இருந்தார்.

அந்த வாழ்த்தில் ” மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய தேசத்திற்காக உங்களது அர்ப்பணிப்பும் பங்களிப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த பிறந்தநாளில் உங்களுக்கு வாழ்த்துக்களும் வெற்றிகளும் உறுதியாகட்டும்” என பதிவு செய்திருந்தார். இந்த பதிவிற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் மாலத்தீவின் அரசியல்வாதியான ஷஹீத் ரமீஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக பதிவிட்டு இருக்கும் அவர் ” இந்தியாவின் மதிப்பிற்குரிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இந்தப் பிறந்தநாளில் மகிழ்ச்சியும் வெற்றியும் உங்களுக்கு உரித்தாகட்டும். மேலும் தங்களது நேர்மறையான ராஜதந்திர நடவடிக்கைகள் தொடரட்டும்” என பதிவு செய்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பிரதமரை விமர்சித்த நிலையில் இன்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா..? ஜனவரி 12ஆம் தேதி தீர்ப்பு..!! நீதிபதி அல்லி அறிவிப்பு..!!

Tue Jan 9 , 2024
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி 3-வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகி, இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், செந்தில் […]

You May Like