fbpx

இந்திய விமானத்திற்கு அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர்!… உயிரிழந்த14 வயது சிறுவன்..!

அவசர சிகிச்சைக்காக இந்திய விமானத்தை பயன்படுத்த அதிபர் முகமது அனுமதி அளிக்காததால் 14 வயது சிறுவன் உயிரிழந்ததாக மாலத்தீவு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலத்தீவு புதிய அதிபராக முகமது முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மாலத்தீவில் இந்திய படை வீரர்கள் 88 பேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை மார்ச் 15ம் தேதிக்குள் திரும்பப்பெறும்படி இந்தியாவுக்கு மாலத்தீவு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தநிலையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) தயாரித்து இந்தியாவால் வழங்கப்பட்ட டோர்னியர் விமானம், மனிதாபிமான நோக்கங்களுக்காக மாலத்தீவு நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மாலத்தீவில் இந்திய விமானத்தை பயன்படுத்த அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவின் கபி அலிப் விலிங்இல்ஸ் என்ற பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு மூளையில் கட்டி இருந்துள்ளது.

இதற்கான சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு கடந்த வியாழக்கிழமை வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனுக்கு உடனடியாக மேல்சிகிச்சை அளிக்க தலைநகர் மாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், சிறுவனை அழைத்து செல்ல இந்தியா வழங்கிய டிரோனியர் விமானத்தை பயன்படுத்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விமானத்தை பயன்படுத்த அதிபர் முகமது ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியா வழங்கிய விமானத்தை பயன்படுத்த அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியானது. பின்னர், 16 மணிநேரத்திற்கு பின் சிறுவன் விமானம் மூலம் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானத்தை பயன்படுத்த அதிபர் முகமது அனுமதி அளிக்காததால் சிறுவன் உயிரிழந்ததாக மாலத்தீவு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் மீகைல் நசீம் தெரிவிக்கையில், அதிபருக்குக்கு இந்தியா மீதான பகைமையை போக்க மக்கள் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டியதில்லை என்றார். ஆனால் உண்மையில் இந்த விவகாரத்தில் அதிபர் தலையிட்டாரா அல்லது அதிகாரிகளே முடிவெடுக்க தாமதப்படுத்தினார்களா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Kokila

Next Post

வடகொரியாவில் சினிமா பாடலை கேட்ட சிறுவர்கள்!… 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட அவலம்!

Sun Jan 21 , 2024
வடகொரியாவில் சினிமா இசையை ரசித்த 2 பள்ளி சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனையை வடகொரியா அரசு வழங்கியுள்ளது. கிழக்காசிய நாடான வடகொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை உள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, […]

You May Like