ஈரோடு மாவட்டம், புதுப்பாளையம் காட்டு பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலம் மரத்தில் தொங்கியுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் தொங்கிய சடலங்களை மீட்டு, பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சடலமாக தொங்கியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தூக்கில் தொங்கிய பெண் பொன்முடியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மனைவி 33 வயதான கலைச்செல்வி. சடலாமாக தொங்கிய ஆண், அதே ஊரைச் சேர்ந்த 25 வயதான தீபன்ராஜ். கலைச்செல்வியும், தீபன்ராஜூம் கள்ளக்காதலர்கள். இந்நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர்கள் கள்ளக்காதல் உறவு குறித்து இவர்களின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவமானம் தாங்காமல் கள்ளக்காதல் ஜோடி, புதுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.