கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வரகரை பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான செல்வராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரூபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் திருமணம் முடிந்துள்ளது. ஆனால், திருமணம் ஆன நாள் முதல் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சமீப காலமாக ரூபி வேறொருவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை செல்வராஜ் தட்டிக் கேட்டதையடுத்து, மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம், ரூபி அவரது கள்ளக்காதலனுடன் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு சென்றுவிட்டார். வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது தான் செல்வராஜுக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இதனால் அன்று இரவு முழுவதும் செல்வராஜ் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். ஆனால் மறுநாள் காலை, அந்த ஊரில் உள்ள 250-க்கும் மேற்பட்ட ஆண்களை தனது வீட்டிற்கு அழைத்து மது விருந்தும், கிடா பிரியாணி சாப்பாடும் போட்டு பார்ட்டி கொடுத்துள்ளார். மது அருந்திய செல்வராஜ், பார்டியில் உற்சாகமாக ஆடி பாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூகலைதளங்களில் வைரலாகி வருகிறது.